அமைதிப்பூங்கா விதிமுறைகள்
- இறந்தவரின் மருத்துவர் சான்றிதழ் ஒரிஜினல் - 1
- இறந்தவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1
- இறந்தவரின் ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஜெராக்ஸ் - 1
- பதிவு செய்தவருடைய ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஒரிஜினல் காண்பிக்க வேண்டும்.
- இறந்தவரின் சொந்தங்கள் 4 நபர்கள் ஆதார் கார்டு ஒரிஜினல் காண்பிக்க வேண்டும்.
- காலை 7.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை எரியூட்டும் மயானம் செயல்படும்.
- ஆம்புலென்ஸ் 15 கிலோ மீட்டர் வரை சென்று எடுத்து வந்து எரியூட்டும் கட்டணம் ரூ. 3,000/-
- ஆம்புலென்ஸ் 15 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால் கிலோ மீட்டருக்கு ரூ. 20 கூடுதலாக கட்ட வேண்டும்.
- மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை எரியூட்டும் கட்டணம் ரூ. 6,000/-
- இரவு 9.00 மணிக்குமேல் எரியூட்டும் பணி நடைபெறாது.
- இறந்தவரின் உடல் எரியூட்ட வரும்போது மெத்தை, தலையணை மற்றும் இதர பொருட்களை ஆம்புலென்ஸில் கொண்டு வரக்கூடாது.
- இறந்தவரின் அஸ்தியை கரைக்கவும், குளித்துவிட்டு காரியங்கள் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- அமைதிப்பூங்காவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கண்டிப்பாக சன்மானம் கொடுக்கக்கூடாது.
- அமைதிப்பூங்காவிற்கு நன்கொடை கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்தில் நன்கொடை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும்.
- குளிர்சாதனப் பெட்டி இங்கு கிடைக்கும். ஒரு நாள் வாடகை (24 மணிநேரம்) ரூ. 1,500/- வண்டி வாடகை ரூ. 1,000/- (15 கிலோ மீட்டருக்குள்), 15 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால் கிலோ மீட்டருக்கு ரூ. 20/-




